30 ரூபாய் லஞ்சம் கேட்டு டிரைவரை தாக்கிய வன ஊழியர்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனைச்சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூலிக்காமல் இருப்பதற்காக வனத்துறை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பண்ணாரி வன சோதனைச்சாவடி வழியாக வாகனத்தில் சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டிரைவரிடம் வனத்துறை ஊழியர் 30 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் தரமறுக்கவே வனத்துறை ஊழியர், அந்த டிரைவரை சோதனைச்சாவடி கட்டிடத்துக்குள் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த வாகன ஓட்டுனர்கள் சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு வனத்துறை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post 30 ரூபாய் லஞ்சம் கேட்டு டிரைவரை தாக்கிய வன ஊழியர் appeared first on Dinakaran.

Related Stories: