இந்நிலையில் நேற்று முன்தினம் வீடு திரும்பியவரிடம் பலர் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த அவர் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்துவாச்சாரி போலீசார் விசாரித்தபோது, முகிலன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. இதில், நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ரூ.1 கோடிக்கு மேல் ஜெகதீசனிடம் ஏமாந்து விட்டேன். என்னிடம் இன்று ஒன்றுமே இல்லை. என்னை ஆள்வைத்து தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறான். அதனால் நான் இறந்த பிறகாவது அரசாங்கம் ஜெகதீசனிடம் பணத்தை மீட்டுக் கொடுக்கும் என்று தான் இந்த முடிவை எடுத்தேன் என்று எழுதியுள்ளார்.
The post நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை: ரூ.1 கோடிக்கு மேல் ஏமாந்ததாக உருக்கமான கடிதம் appeared first on Dinakaran.
