கட்டணத்தை 25% குறைத்த பின்னரும் வந்தே பாரத் ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பில்லை.. 60% இருக்கைகள் காலியாகவே உள்ளது!!

டெல்லி : சொகுசு வசதி, அதிவேக பயணம் என ஒன்றிய அரசு கொண்டு வந்த வந்தே பாரத் ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத நிலையே தொடர்கிறது. கட்டணத்தை குறைத்த போதும் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நாடு முழுவதும் ரயில் சேவையை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. தற்போது 25 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. சொகுசு வசதியுடன் அதிவேக பயணம் என கூறப்பட்டாலும் வந்தே பாரத் ரயில் சேவைக்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாத நிலையே இருந்து வருகிறது.

இதனால் அண்மையில் கட்டணம் 25% அளவுக்கு குறைத்து நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக கூடுதல் பயணிகள் பயணம் செய்வார்கள் என ஒன்றிய அரசு எதிர்பார்த்த நிலையில், கட்டண குறைப்பிற்கு பின்னரும் குறைந்த பயணிகளே பயணம் செய்து வருகின்றனர். 8 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயிலில் 536 இருக்கைகள் உள்ள நிலையில் 200-300 பயணிகளே பயணிக்கும் சூழல் உள்ளது.

வந்தே பாரத் ரயிலில் பயணிக்க இணையத்தில் 40 முதல் 60% அளவிற்கு முன்பதிவு செய்யப்படாமல் இருப்பதும் காண முடிகிறது. சதாப்தி ரயிலுக்கு இணையானதாக கருதப்படும் வந்தே பாரத் ரயிலின் கட்டணம் மிக அதிகம். இதன் காரணமாகவே பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைக்கு வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது. விளம்பரங்களுக்காக ஏற்கனவே அதிக பயண வசதி கொண்ட பெரு நகரங்களில் மட்டுமே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுவதும் பயணிகள் குறைவிற்கு காரணமாக உள்ளது.

The post கட்டணத்தை 25% குறைத்த பின்னரும் வந்தே பாரத் ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பில்லை.. 60% இருக்கைகள் காலியாகவே உள்ளது!! appeared first on Dinakaran.

Related Stories: