தந்தையின் அறிவுரைப்படி 20 திருமணம் செய்த தான்சானியாக்காரர்: 104 குழந்தைகள் 144 பேரன் பேத்திகளுடன் வாழ்ந்துவரும் அதிசயம்

தான்சானியா: தந்தையின் அறிவுரையை ஏற்று 20 பெண்களை திருமணம் செய்து 104 குழந்தைகள் 144 பேரன் பேத்திகளுடன் வாழ்ந்துவரும் தான்சானியாவை சேர்ந்த கபிங்கா என்பவர் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். தான்சானியாவில் 1961 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு அவ் ஆண்டுமுதல் குழந்தையும் பிறந்துள்ளது. அப்போது கபிங்காவை அழைத்த அவரது தந்தை நிறைய திருமணங்கள் செய்து ஏராளமான குழந்தைகளை பெற்று குடும்பத்தை பெருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு நாமே வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தந்தையின் வாக்கை வேத வாக்காக கருதி அடுத்தடுத்து 20 திருமணங்கள் செய்துள்ளார் கபிங்கா. 20 மனைவிகளில் 4 பேர் இறந்துவிட இப்பொது 16 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களில் 7 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் என்பது பலருக்கு வியப்பாக உள்ளது. 20 மனைவிகள் மூலமாக 104 குழந்தைகளை பெற்று கொண்ட கபிங்கா பாதி குழந்தைகளின் பெயர்கள் மட்டுமே நினைவில் உள்ளதாகவும் எஞ்சிய குழந்தைகளை பார்க்கும் போது பெயர் நினைவுக்கு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார். இப்பொது இவருக்கு 144 பேர குழந்தைகளும் உள்ளனர். மிக பெரிய வசதி படைத்த பின்புலம் எதுவும் இல்லாமல் கபிங்கா தன்னுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். அண்மையில் அளித்த பேட்டியின் மூலமாக கபிங்கா வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளார்.

 

The post தந்தையின் அறிவுரைப்படி 20 திருமணம் செய்த தான்சானியாக்காரர்: 104 குழந்தைகள் 144 பேரன் பேத்திகளுடன் வாழ்ந்துவரும் அதிசயம் appeared first on Dinakaran.

Related Stories: