வங்கதேசம்: இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்திவைப்பதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது. டெல்லி, சென்னை, அகர்தலா உட்பட அனைத்து தூதரகங்களிலும் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு விசாக்களைத் தவிர, சுற்றுலா உள்ளிட்ட இதர அனைத்து வகை விசா சேவைகளும் ரத்து செய்துள்ளது. வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான பதற்றம் அதிகரித்துள்ளது.
