மறுநாள் (20ம் தேதி) காலையில் பிரீத்தியை, புனித் செல்போனில் தொடர்பு கொண்டு, நேரில் சந்திக்க அழைப்பு விடுத்தார். அதன்படி கடந்த 22ம் தேதி புனித், தனது நண்பரின் காரை எடுத்து கொண்டு ஹாசனுக்கு வந்தார். அதுபோல் பிரீத்தி, தனது தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்தார். இருவரும் நேரில் சந்தித்தனர். பின்னர் காரில் எங்கேயாவது அழைத்து செல் என்று புனித்திடம் பிரீத்தி கூறியுள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து, மைசூருவுக்கு சென்றனர். அங்கு சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு மண்டியாவில் கே.ஆர்.எஸ். அணை அருகே உள்ள ஒரு விடுதிக்கு சென்று அறை எடுத்து தங்கினர். அப்போது இருவரும் ‘ஜாலி’யாக இருந்தனர். பின்னர் மீண்டும் பிரீத்தி, உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதற்கு புனித் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், கே.ஆர்.பேட்டை அருகே கத்தரகட்டே வனப்பகுதிக்கு புனித் காரில் அழைத்து சென்றார். அங்கு மீண்டும் உல்லாசத்துக்கு புனித்தை பிரீத்தி அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போதும் புனித் மறுத்துள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புனித், சரமாரியாக பிரீத்தியை தாக்கியுள்ளார். மேலும் அங்கு கிடந்த ஒரு கல்லை எடுத்து பிரீத்தியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரீத்தி, ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து பிரீத்தியின் உடலை காரில் ஏற்றி கொண்டு அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு சென்றார். அங்கு பிரீத்தியின் உடலில் இருந்த நகைகளை எடுத்து கொண்டார். பின்னர் உடலை வீசி விட்டு தப்பி சென்றார். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி புனித்தை கைது செய்தனர்.
The post உல்லாசத்துக்கு அழைத்து தொந்தரவு பேஸ்புக் தோழி கொடூர கொலை: ஆண் நண்பர் கைது appeared first on Dinakaran.
