எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்…

இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பைப் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மா குறித்து முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி ஆகியோர் மாறுப்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர். சவுரவ் கங்குலி, ‘ரோகித் சர்மா 5முறை ஐபிஎல் கிரிக்கெட் கோப்பைகளை வென்றது, எளிதானதல்ல. மேலும் 2019 ஒருநாள் உலக கோப்பையில் 5 சதங்களை விளாசியது மிகவும் கடினமானது. அதனால் இந்த ஆண்டு அதை செய்து இந்தியாவுக்காகவும் , உலக கோப்பையை வென்று தருவார் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

சுனில் கவாஸ்கர், ‘ரோகித் சர்மாவின் கேப்டன் பணியில் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அவர் அணியை கையாண்ட விதம் எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. கேப்டனுக்கு மட்டுமின்றி பயிற்சியாளர்களுக்கும் பொறுப்பு இருப்பதாக தெரியவில்லை. தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் என பலர் இருப்பதால் ஆலோசனை சொல்ல முடியாமல் பின்வாங்க வேண்டியதாக உள்ளது’ என்று வருந்தியுள்ளார்.

The post எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்… appeared first on Dinakaran.

Related Stories: