காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

காஞ்சிபுரம்: அம்பேத்கரின் பிறந்தநாளான 14ம் தேதி (இன்று) சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டுவது வழக்கம். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், காஞ்சிபுரத்தில் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் தலைமையில், சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடுவோம். ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்.

சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன். சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி ஏற்கிறேன் என்று உறுதிமொழி ஏற்றனர். இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள் மற்றும் எஸ்பி அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உத்திரமேரூர்: உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் அலுவலக ஊழியர்கள் சார்பில், அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு, இதில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துத் தந்த அம்பேத்கரின் பிறந்தநாளில் சாதி வேறுபாடுகளை ஏதும் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன் என சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

The post காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: