புகாரின்படி, நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மோசடி செய்த நபரின் ஐபி முகவரியை ஆய்வு செய்த போது, புகார் அளித்த மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்த எடிசன் (29) என தெரியவந்தது.
சென்னை நீலாங்கரை கசூரா டைமண்ட்ஸ் பகுதியை சேர்ந்த எடிசனை பிடித்து விசாரணை நடத்திய போது, தன்னுடன் பணியாற்றிய நீலாங்கரையை சேர்ந்த ராம்குமார் (29), ஆதம்பாக்கம் சுரேந்திர நகரை சேர்ந்த காவ்யா வசந்த கிருண்ஷன் (29), பெங்களூரு வடக்கு பெல்லாரி சாலையை சேர்ந்த ரவிதா தேவசேனாபதி (40), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த கருப்பையா (26) ஆகியோர் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட டேட்டாக்களை திருடி, அதை ஹேக் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 ஊழியர்களையும் அதிரடியாக கைது செய்தனர்.
The post பிரபல ஐடி நிறுவனத்தில் டேட்டா திருட்டு பெண்கள் உள்பட 6 பொறியாளர்கள் கைது appeared first on Dinakaran.
