பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% உயர்வு


சென்னை: அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்பட்டுள்ளது. தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பட்டங்களுக்கு ரூ.450ல் இருந்து ரூ.670 ஆக உயர்கிறது. புதிய கட்டணம் எதிர்வரும் நவம்பர் – டிசம்பர் செமஸ்டர் தேர்வில் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

The post பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: