எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: சென்னையில் 24, 25ம் தேதிகளில் நடக்கிறது

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி, 24ம் தேதி காலை 9.30 மணிக்கு சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள். 24ம் தேதி மாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்கள்.

25ம் தேதி காலை 9.30 மணிக்கு திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள். 25ம் தேதி மாலை 3.30 மணிக்கு திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை புறநகர், வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு (கிழக்கு), தென்சென்னை வடக்கு (கிழக்கு), தென்சென்னை வடக்கு (மேற்கு), தென்சென்னை தெற்கு (கிழக்கு), தென்சென்னை தெற்கு (மேற்கு) ஆகிய மாவட்ட பொறுப்பாளர்களும், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும், என அதிமுக தலைமை அலுவலகம் தெரிவி த்துள்ளது.

The post எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: சென்னையில் 24, 25ம் தேதிகளில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: