கெஜ்ரிவாலுக்கு ஈடி 5வது சம்மன்: நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு 5 வது முறையாக முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புதிய மதுபானக்கொள்கை தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக கோரி அமலாக்கத்துறை ஏற்கனவே நான்கு முறை சம்மன் அனுப்பியுள்ளது. முதல்முறையாக கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. பின்னர் டிசம்பர் 21ம் தேதி, ஜனவரி 3 மற்றும் ஜனவரி 18ம் தேதியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் ஒரு முறை கூட கெஜ்ரிவால் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் நாளை நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5வது முறையாக சம்மன்அனுப்பியுள்ளது.

The post கெஜ்ரிவாலுக்கு ஈடி 5வது சம்மன்: நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: