டெக்ரான்: ஈரானில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரானின் குர்திஷ்தான் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சனான்டஜ் பகுதியில் பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக தார் லோடு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. இதில் பேருந்து மற்றும் லாரி ஆகியவை தீப்பற்றி எரிந்தன.
