புதுடெல்லி: டெல்லி பல்கலை மாணவியை கொன்று எரிக்க முயன்ற காதலன் கைது செய்யப்பட்டார். டெல்லியை சேர்ந்த 18 வயது மாணவி டெல்லி பல்கலையின் திறந்த வெளி கற்றல் பள்ளியில் படித்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை வகுப்பு சென்ற அவர் மதியம் வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் மாணவியின் காதலன் அர்ஷ்கிருத் சிங் குடும்பத்தினர், மாணவியின் பெற்றோரை செல் ேபானில் தொடர்புகொண்டு தங்கள் மகன் தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள சஞ்சய் வனம் என்ற இடத்தில் கத்தியால் தாக்கப்பட்டதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மாணவி வீடு திரும்பாத தால் அவரது பெற்றோர் தேடத்தொடங்கிய போது சஞ்சய் வனம் பகுதியில் மாணவியை கத்தியால் குத்திக்கொன்று விட்டு, எரிக்க முயன்றது தெரிய வந்தது. இதையறிந்த போலீசார் நேற்று சென்று மாணவியின் உடலை கைப்பற்றினர். காதலன் அர்ஷ்கிருத் சிங்கையும் கைது செய்து எதற்காக கொன்றார் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.
The post டெல்லி பல்கலை மாணவியை கொன்ற காதலன் கைது: எரிக்க முயன்றதும் அம்பலம் appeared first on Dinakaran.
