டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல்: செல்போன் டவரிலும் ஏறி போராட்டம்

திருச்சி: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாகவும், பிரதமர் மோடி பொறுப்பேற்றதும் அளித்த வாக்குறுதியின்படி விவசாய விளைப்பொருட்களுக்கு இருமடங்கு லாபகரமான விலை வழங்காததை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையம் முன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடத்துவதற்காக விவசாயிகள் வந்தனர். தபால் நிலையத்துக்குள் விவசாயிகள் நுழையாதவாறு பேரிகார்டுகளை போலீசார் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் தபால் நிலைய ரவுண்டானா அருகில் பஸ் நிலையம் செல்லும் சாலையில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் தனது கையில் மனித மண்டை ஓடுகளை வைத்தவாறு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள செல்போன் டவரில் 50 அடி உயரத்துக்கு சங்க கொடியுடன் 5 விவசாயிகள் திடீரென ஏறி கோஷமிட்டனர். இதை பார்த்த போலீசார், உடனடியாக 5 பேரையும் செல்போன் டவரில் இருந்து இறங்குமாறு ஒலிபெருக்கி மூலம் கேட்டுக்கொண்டனர். 15 நிமிட போராட்டத்துக்கு பிறகு 5 விவசாயிகளும் டவரில் இருந்து இறங்கி வந்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 60 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

The post டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல்: செல்போன் டவரிலும் ஏறி போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: