தலித்தை முதலமைச்சராக்க தலித் எம்.எல்.ஏ.க்களே எதிர்ப்பு தெரிவித்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் பரபரப்பு பேட்டி..!!

புதுக்கோட்டை: தலித் ஒருவரை முதலமைச்சராக்க தலித் எம்.எல்.ஏ.க்களே எதிர்ப்பு தெரிவித்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்; பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்யும் முன், சபாநாயகர் தனபாலை முதல்வராக்க சசிகலாவிடம் முன்மொழிந்தேன். எடப்பாடிக்கு தினகரனால் பிரச்சனை ஏற்பட்டபோது தனபாலை முதல்வராக்கலாம் என்று சசிகலா மூலம் தெரிவித்தேன்.

தலித்தை முதல்வராக்கும் தமது கருத்தை அப்போது திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றிருந்தனர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 35 எம்.எல்.ஏ.க்களே, தன்பாலை முதலமைச்சராக்க எதிர்ப்பு தெரிவித்தனர். 2026 தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணையும்; எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக ஒருங்கிணைப்புதான் நடக்கும். எடப்பாடிக்கு அறிவுரை கூறும் அளவுக்கு தான் பெரிய ஆள் இல்லை என்றும் தன்னை விட அவர் சீனியர் என்றும் திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

The post தலித்தை முதலமைச்சராக்க தலித் எம்.எல்.ஏ.க்களே எதிர்ப்பு தெரிவித்ததாக சசிகலா சகோதரர் திவாகரன் பரபரப்பு பேட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: