மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக வருகிறது. பழைய குற்றால அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக வருகிறது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது அனைத்து அருவிகளிலும் தடை இன்றி குளிக்க அனுமதிக்கப்படுவதாலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதாலும் சீசன் களைகட்டி காணப்படுகிறது.
The post குற்றாலத்தில் சீசன் களை கட்டியது; விடுமுறை தினமான இன்று கூட்டம் அலைமோதியது appeared first on Dinakaran.
