கள்ளச்சாராய வழக்கு குற்றவாளி குண்டாசில் சிறையிலடைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த வெங்குடி கிராமத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய கள்ளச்சாராய வழக்குகளில், சம்மந்தப்பட்ட குற்றவாளியை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டார். காஞ்சிபுரம் மாவட்டம், வெங்குடி கிராமச்சை சேர்ந்தவர் பொன்னுக்கண்ணு மகன் கணேசன் (53). இவர், கடந்த பிப்.மாதம் வீட்டில், எரிசாராயம் கேன்களில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மதுவிலக்கு போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது, அவரது வீட்டின் பின்புறம் பிளாஸ்டிக் கேனில் 35 லிட்டர் வீதம் 9 கேன்களில் 315 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து, குற்றவாளி கணேசனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். எஸ்பி பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் குற்றவாளி கணேசனை ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்குமாறு நேற்று உத்தரவிட்டார். அதன்படி, கள்ளச்சார வழக்கு குற்றவாளியை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

The post கள்ளச்சாராய வழக்கு குற்றவாளி குண்டாசில் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: