பொது சிவில் சட்டம் மூலம் இடஒதுக்கீட்டை ஒழிக்க சதி: தமிமுன் அன்சாரி பேட்டி

ராஜபாளையம்: மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி ராஜபாளையத்தில் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘பொது சிவில் சட்டத்தில் உரிமையியல் சட்டங்கள் என 400 பிரிவுகள் உள்ளன. இதில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தலா 4 சட்டங்கள் மட்டுமே உள்ளது. மற்றவை பெரும்பான்மையான இந்து மற்றும் ஏனைய சிறுபான்மை சமுதாய மக்களுக்கு உள்ளன.

பொது சிவில் சட்டம் கொண்டு வருகிறோம் என்ற சூழ்ச்சிக்குபின் இடஒதுக்கீட்டை முற்றிலுமாக அழித்து ஒழிக்க கூடிய சதி செயல் உள்ளது. இது அனைவருக்கும் எதிரானது என்பதால் நாங்கள் எதிர்க்கிறோம். விவசாயத்தில் பரவல் தன்மை இல்லாததே தற்போதைய காய்கறி விலை உயர்வுக்கு காரணம். விலை உயர்ந்துள்ள தக்காளி, சின்ன வெங்காயம் போன்ற காய்கறிகள் உற்பத்திக்கு சரியான திட்டமிடல் இல்லை. இந்த தோல்வி தான் மக்களை வதைத்து கொண்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

The post பொது சிவில் சட்டம் மூலம் இடஒதுக்கீட்டை ஒழிக்க சதி: தமிமுன் அன்சாரி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: