ஆனால், அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த 12ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் பேட்டியளித்த ராமதாஸ், நிர்வாகிகளை சந்திக்கவிடாமல் மானபங்கப்படுத்திவிட்டார், என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார், குலசாமி என கூறி நெஞ்சில் குத்தினார் என்று மீண்டும் அன்புமணி மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதையடுத்து அன்புமணி திடீரென தன்னை மன்னித்து விடும்படி பொதுவெளியில் ராமதாசிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். ஆனால் அதை ஏற்க ராமதாஸ் தயாராக இல்லை. இதையடுத்து பல்வேறு மாட்ட பொதுக்குழுவை கூட்டி அன்புமணி பேசி வருகிறார். அதன்படி ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம், இரும்பாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார். மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இதுதான் நம்முடைய நோக்கம். கடந்த சில வாரங்களாக நம்மை சுற்றி சில சூழல்கள், குழப்பமான சூழ்நிலைகள் நிலவி கொண்டிருக்கிறது. என் மீது பல குற்றச்சாட்டுகள் (ராமதாஸ் கூறியவை) வைக்கப்பட்டிருக்கின்றன. வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் 100 சதவீதம் பொய்யான குற்றச்சாட்டுகள். இன்னும் சில நாட்களில் உங்களுக்கு தெளிவுப்படுத்துவேன். நமது கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும் என்னுடைய மனம் மிகுந்த சுமையை சுமந்து ெகாண்டிருக்கிறது. கட்சிக்காக அமைதியாக இருக்கிறேன்.
நமது மாநாட்டை ஒரு சில கட்சிகள் பொறாமையில் பார்த்தனர். பாமக தைரியமான கட்சியாகும். எந்த தடை வந்தாலும், நான் பார்த்து கொள்கிறேன்.
எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள், பார்த்து கொள்ள போகிறீர்கள். நான் உங்களில் ஒருவன். கட்சி தலைவர் பொறுப்பு எனக்கு பொதுழுக்குழுவில் நீங்கள் கொடுத்தது. பொதுக்குழுவில் என்னை நீங்கள் தேர்ந்து எடுத்தீர்கள். பொதுக்குழு தேர்வு செய்த நானும் பொதுச்செயலாளரும், பொருளாளரும் இங்கே இருக்கிறோம். நானும் உங்களை போன்று தொண்டன்தான். என் நோக்கம் இந்த கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும். இதற்காகத்தான் நான் 27 ஆண்டு காலமாக உழைத்து வருகிறேன். என்னுடைய வாழ்க்கையில் முதல்முதலில் கட்சி கொடியை ஏற்றியது சேலம் மேற்கு தொகுதி தான்.
அந்த தைரியம், நம்பிக்கையும் நீங்கள் கொடுத்தது. அந்த ைதரியத்தில்தான் அடுத்த களத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். பிரச்னைகளை நான் பார்த்து கொள்கிறேன். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் தைரியமாக களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். வரும் ஜூலை 25ம் தேதி ராமதாஸ் பிறந்தநாளில் நான் ஒரு நடைப்பயணத்தை ேமற்கொள்கிறேன். அது ‘தமிழக மக்களின் உரிமை மீட்பு’ நடைப்பயணம். அதற்கு நீங்கள் எல்லோரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த நடைப்பயணம் நவம்பர் 1ம் தேதி நிறைவு பெறுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல இருக்கிறேன். இவ்வாறு அன்புமணி பேசினார்.
The post இன்னும் சில நாட்களில் தெளிவுபடுத்துவேன் என் மீது ராமதாஸ் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100 சதவீதம் பொய்யானது: சேலத்தில் அன்புமணி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.
