முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்பட்ட மருத்துவமனையில் பிறந்த முதல் குழந்தைக்கு பரிசு: பல்லாவரம் எம்எல்ஏ வழங்கினார்


தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், 14வது வார்டு, ஜமீன் பல்லாவரம் பகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மையம், நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவ கின்றனர். இங்கு போதுமான வசதிகள் இல்லாததால் அதனை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், ₹1.20 கோடி மதிப்பீட்டில் அந்த மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த மருத்துவமனையில் பல்லாவரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. தகவலறிந்த பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மருத்துவமனைக்கு நேரில் சென்று, முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட மருத்துவமனையில் பிறந்த முதல் குழந்தைக்கு அரசு சார்பிலும், தனது சொந்த செலவிலும் குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார். மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்பட்ட மருத்துவமனையில் பிறந்த முதல் குழந்தைக்கு பரிசு: பல்லாவரம் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: