சென்னை : சென்னை கொரட்டூர் பகுதியில் காவல்நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வால் பரபரப்பு ஏற்பட்டது. நில அதிர்வு பீதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.