சென்னையில் திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த சிறைச்சந்தைக்கு வரவேற்பு: 12 மத்திய சிறைகளில் தயாராகும் 57 வகை பொருட்கள் விற்பனை

சென்னை: சென்னையில் திறக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சிறைச்சந்தை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 12 மத்திய சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் 57 வகையான பொருட்கள் சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் இயங்கும் சிறை சந்தை விற்பனை நிலையம் மூலமாக விற்கப்படுகிறது.

இதில் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வெளிச்சந்தையை விட மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் 40 விழுக்காடு சிறைபணியாளர்கள் மற்றும் சிறை கைதிகளின் அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தபடுகிறது. இந்த சிறை சந்தையானது. வாரத்தில் திங்கள் முதல் சனி வரை காலை 10 மணி முதல் மாலை ஏழு மணி வரை செயல்படுகிறது.

The post சென்னையில் திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த சிறைச்சந்தைக்கு வரவேற்பு: 12 மத்திய சிறைகளில் தயாராகும் 57 வகை பொருட்கள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: