செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்றுவது பற்றி பரிசீலனை: ஐகோர்ட் தகவல்

சென்னை: செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்றுவது பற்றி பரிசீலனை செய்ய ஐகோர்ட் தகவல் தெரிவித்துள்ளது. சின்ன காஞ்சியைச் சேர்ந்த எம்.எஸ்.குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.

மனுவில், கடந்த 2019ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நீதிமன்றங்களும் சார்பு நீதிமன்றங்களும் செங்கல்பட்டில் உள்ளன.

செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது பேசிய நீதிபதிகள் ஐகோர்ட் நிர்வாக பிரிவு பரிசீலித்து வருவதாக தெரிவித்தனர்.

The post செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்றுவது பற்றி பரிசீலனை: ஐகோர்ட் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: