ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை பணி

ஸ்ரீபெரும்புதூர்: மொளச்சூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி பூமிபூஜை செய்து தொடங்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொளச்சூர்-பள்ளமொளச்சூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பள்ளமொளச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனால், இந்த சாலை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, 3 கட்டமாக சாலை சீரமைக்க திட்டமிடபட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று சிமென்ட் சாலை அமைக்க இந்து, முஸ்லீம், கிருஸ்தவம் சார்பில் சர்வமத பிரார்த்தனையுடன் பூமிபூஜை நடைபெற்றது. விழாவில், மொளச்சூர் ஒன்றிய கவுன்சிலர் ஆண்டனி வினோத்குமார் கலந்து கொண்டு சாலை சீரமைப்பு பணியை துவக்கி வைத்தார்.

The post ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை பணி appeared first on Dinakaran.

Related Stories: