சென்னை: சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மூதாட்டி நிரஞ்சனா தேவியின் கைப்பையில் இருந்த 14 சவரன் நகை திருடப்பட்டது. குரோம்பேட்டையில் இருந்து அஸ்தினாபுரத்துக்குச் சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.