தம்பி, மனைவி முன்ஜாமீன் மனு இன்று விசாரணை ஜாபர் சாதிக் நீதிமன்ற காவல் ஆக.12ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத் தில் அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது. இந்நிலையில், வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானு மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் உயர் நீதி மன்றத்தில் மனுசெய்துள்ளனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், போதைப் பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பல கோடி ரூபாயில் பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஜாபர் சாதிக் தனது மனைவி மற்றும் அவரது சகோதரர் பெயரில் வாங்கியுள்ளார்.

இதுதொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இருவரும் ஆஜராகவில்லை. போதைப் பொருள் கடத்தில் வழக்கில் ஜாபர் சாதிக் சகோதரர் ஒருமுறை கைது செய்யப்பட்டுள்ளார் என்று வாதிட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ், அமலாக்கத்துறை பதில் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். இதையடுத்து, விசாரணையை இன்றைக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்து. இதையடுத்து, அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post தம்பி, மனைவி முன்ஜாமீன் மனு இன்று விசாரணை ஜாபர் சாதிக் நீதிமன்ற காவல் ஆக.12ம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: