பிரிஸ்பேன் டென்னிஸ் இன்று தொடக்கம்

பிரிஸ்பேன்: புதிய சீசனின் முதல் தொடராக பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள இந்த தொடரில், ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் மற்றும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதியுடன் விளையாடும் நடால், இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரேவுடன் நேற்று உற்சாகமாகப் பயிற்சி மேற்கொண்டார். தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று வரும் வீரரை முதல் சுற்றில் நடால் எதிர்கொள்வார்.

ஹோல்கர் ரூனே (டென்மார்க்), ஆண்டி மர்ரே (இங்கி.), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), பென் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோரும் இந்த தொடரில் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலெங்கா (பெலாரஸ்), எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), யெலனா ஓஸ்டபென்கோ (லாட்வியா), லியுட்மிலா சாம்சனோவா (ரஷ்யா), டாரியா கசட்கினா (ரஷ்யா), விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்), கரோலினா பிளிஸ்கோவா (செக்.) உள்பட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

The post பிரிஸ்பேன் டென்னிஸ் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: