மர்ம நபர்கள், தங்களது அடையாளத்தை மறைக்கப் போலி மின்னஞ்சல் முகவரிகள், விபிஎன் மற்றும் டார்க் வெப் போன்றவற்றைப் பயன்படுத்தியிருந்தனர். இந்தத் தொடர் மிரட்டல்களுக்குப் பின்னணியில் இருந்தது சென்னையைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் ரெனி ஜோஷில்டா என்ற பெண் அதிகாரி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
தான் ஒருதலையாகக் காதலித்த திவிஜ் பிரபாகர் என்பவர், வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ததால், அவரைப் பழிவாங்கும் நோக்கில், அவரது பெயரிலேயே போலி மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி இந்த மிரட்டல்களை விடுத்துள்ளார். ரோபோட்டிக்ஸ் படித்த பொறியாளரான இவர், தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். நீண்ட தொழில்நுட்பக் கண்காணிப்புக்குப் பிறகு, அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் அவரைச் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post 12 மாநிலங்களில் 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.
