பாஜ மாநில தலைவர் டிசம்பரில் மாற்றம்: அண்ணாமலை தகவல்

நாகர்கோவில்: ‘டிசம்பரில் பாஜ மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்கள்’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: மோடி அரசு 3வது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், நிர்மலா சீதாராமன் அருமையான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அடுத்து சென்னை உள்பட பல நகரங்களுக்கு திட்டங்கள் இருக்கும். காங்கிரசின் தேர்தல் அறிக்கை பட்ஜெட்டில் வெளியிட்டப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது. சிதம்பரம் கூறியதற்கு நான் சீமான் போல் பதில் கூறவிரும்பவில்லை.

நிருபர்கள்: தேசிய தலைமை உங்களுக்கு அழுத்தம் தருகிறதா?
அண்ணாமலை : என்ன அழுத்தம் தருகிறது?
நிருபர்கள்: உங்கள் வளர்ச்சியை பார்த்து அழுத்தம் தருகிறதா?
அண்ணாமலை : அப்படி வளர்ச்சி என்றால் மகிழ்ச்சிதானே படுவார்கள். தமிழக பாஜவில் நவம்பர், டிசம்பரில் எல்லா அடிப்படையிலும் மாற்றம் நடைபெற உள்ளது. பா.ஜவை பொறுத்தவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் கொண்டு வருவது வழக்கமான நடைமுறை. இதனை முன்னிட்டு, கட்சியின் அடிப்படையான கிளை, ஒன்றியம், மாவட்டம் அதன் பின்னர் மாநிலம் என மாற்றம் கொண்டு வரப்படும்.
இந்த பணிகள் செப்டம்பர் இறுதியில், அக்டோபரில் தொடங்கி நவம்பர் இறுதிக்குள் மேற்கொள்ளப்படும். டிசம்பரில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு முன்பு அனைத்து மாநிலங்களிலும், இந்த மாற்றம் நடைபெற்று புதிய தேசிய தலைவர் நியமிக்கப்படுவார். வலுவானவர்களுக்கு, அனுபவம் உள்ளவர்களுக்கு அடுத்த கட்ட பதவி தேடி வரும். இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். நிறைய பேர் கட்சிகளை விட்டு வெளியேறி எதனையும் எதிர்பார்க்காமல் உள்ளனர். ஏன் இங்கு விஜயதரணி அக்கா கூட இருக்கிறார். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ மாநில தலைவர் டிசம்பரில் மாற்றம்: அண்ணாமலை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: