பா.ஜ தலைவர்களை விட தீவிரமாக இருந்தார்; தமிழ்நாட்டின் மிகப்பெரிய இந்துத்துவா தலைவர் ஜெயலலிதா தான்: அண்ணாமலை பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பா.ஜ மாநில தலைவர் அண்ணாமலை பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வருமாறு: மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜ இரட்டை இலக்க வாக்கு பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜ நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை, தமிழ்நாட்டில் யாரையும் விட உயர்ந்த இந்துத்துவா தலைவராக இருந்தார்.

2014க்கு முன் பாஜவா அல்லது ஜெயலலிதாவா என்று பார்க்கும் போது, ​​​​இயற்கையான தேர்வு. ஒரு இந்து வாக்காளருக்கு ஜெயலலிதாவாக இருப்பார். ஏனெனில் அவர் தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டினார். 2002-03ல் தமிழ்நாட்டில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்தார். அவரது செயல்பாடுகளைப் பார்த்தால் அவர் மிகவும் உயர்ந்த இந்துத் தலைவர்.

2016ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகியது. இந்துக்கள் இப்போது இயல்பாகவே பாஜவைத்தான் தேர்வு செய்கிறார்கள். ஏனென்றால், இப்போது ஜெயலலிதாவை விட்டு விலகி அதிமுக வெகு தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டில் புதிய தலைமையை உருவாக்க 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் பாஜ தலைமை உடனடியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். திராவிட கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்று அண்ணாமலை அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

The post பா.ஜ தலைவர்களை விட தீவிரமாக இருந்தார்; தமிழ்நாட்டின் மிகப்பெரிய இந்துத்துவா தலைவர் ஜெயலலிதா தான்: அண்ணாமலை பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: