பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் பைக் சாகசம்: 3 பேருக்கு பளார் விட்ட போலீஸ்

சமீபத்தில் ஏற்பட்ட பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ராஜஸ்தானில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்கள் விழிப்புடன் இருக்கவும், தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் மூன்று இளைஞர்கள் பைக்கில் சாலையைக் கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரே பைக்கில் மூன்று பேர் அமர்ந்து கொண்டு, பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை கடப்பதும், எதிர்கரையின் நின்று கொண்டிருந்த இரண்டு போலீசார் அவர்களை மடக்கி பிடித்தும் விசாரிக்கின்றனர்.

பின்னர் அவர்களை பளார் பளார் என்று அறைந்தனர். ஆபத்தான நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, இவ்வாறு பைக்கில் சாகசம் செய்து வரலாமா? என்று கேள்வியும் எழுப்பினர். அந்த வீடியோவைப் பார்த்த சிலர், போலீசாருக்கு அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது? என்றும், இன்னும் சிலர் ஆபத்தான பயணம் மேற்கொண்ட இளைஞர்களை இன்னும் அதிகமாக அடித்திருக்க வேண்டும் என்றும் கூறுவருகின்றனர்.

The post பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் பைக் சாகசம்: 3 பேருக்கு பளார் விட்ட போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: