பீகார், ஜார்கண்ட் வழியாக ஒடிசாவில் நுழைந்தது ராகுல் யாத்திரை

புவனேஸ்வர்:மணிப்பூரில் இருந்து தொடங்கிய ராகுலின் யாத்திரை, 24வது நாளான இன்று ஒடிசா மாநிலத்திற்குள் நுழைகிறது. கடந்த 14ம் தேதி வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கினார். பேருந்து, நடைபயண முறையில் நடைபெறும் இந்தப் பயணத்தில் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு வருகின்றனர். மணிப்பூரில் தொடங்கிய யாத்திரை, அசாம், மேற்குவங்கம், பீகார் வழியாக ஜார்கண்ட் நுழைந்தது. இந்நிலையில் இன்று 24வது நாளாக ஒடிசாவிற்கு வரும் ராகுல் காந்தியின் யாத்திரை, சுந்தர்கர் மாவட்டத்தின் பிரமித்ராபூர் வருகிறது. அவர்களை ஒடிசா காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்கின்றனர்.

இதுகுறித்து ஒடிசா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சரத் பட்நாயக் கூறுகையில், ‘இன்று மாலை ராகுல் காந்தி பிர்மித்ராபூர் வந்தடைவார். பிஜா பஹல் பகுதியில் யாத்திரை குழுவினர் ஓய்வுவெடுப்பார்கள். நாளை ரூர்கேலாவில் உள்ள உதித்நகரில் இருந்து பன்போஷ் வரை ராகுல் குழுவினர் யாத்திரை மேற்கொள்வார்கள். அதன்பின் சில நகரங்களின் வழியாக சட்டீஸ்கர் செல்வார்கள்’ என்றார்.

The post பீகார், ஜார்கண்ட் வழியாக ஒடிசாவில் நுழைந்தது ராகுல் யாத்திரை appeared first on Dinakaran.

Related Stories: