வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவலால் 778 பேர் உயிரிழப்பு… 1,57,172 பேர் சிகிச்சை: சுகாதாரத்துறை தகவல்

டாக்கா : வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவலால், 778 பேர் உயிரிழந்ததாகவும் 1,57,172 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. முறையான முன்னெச்சரிக்கை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் நோய்த் தொற்று அதிகரித்ததாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த நாட்டு சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 778-ஆக அதிகரித்துள்ளது. இந்த நோயால் இதுவரை 1,57,172 போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், டெங்கு பாதிப்பு குறித்து முழுமையாக பதிவு செய்யப்படதாதால், உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று ஐ.நா.வின் சிறுவா் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள முத்தா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து டாக்கானில் உள்ள மூத்தா மருத்துவர் கல்லூரி மருத்துவமனையின் இயக்குனர் முகமது நியாதுஸ்மான் கூறுகையில், டெங்கு ஒழிப்பில் நிலையான கொள்கை இல்லாததால் பங்களாதேஷ் வெடிப்பைச் சமாளிக்க போராடி வருவதாகவும், அதற்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது பன்று இங்குள்ளா பலருக்கும் தெரியவில்லை. டாக்கா மற்றும் பிற பெரிய நகரங்களுக்கு வெளியே செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களுக்கு டெங்குவை கையாள்வதில் சிறந்த பயிற்சி தேவை என்று அவர் கூறியுள்ளார்.

The post வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவலால் 778 பேர் உயிரிழப்பு… 1,57,172 பேர் சிகிச்சை: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: