ஆசிய பேட்மின்டன் சிந்து ஏமாற்றம்

துபாய்: ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து போராடி தோற்ரார். காலிறுதியில் தென் கொரியாவின் ஆன் சே யங்குடன் நேற்று மோதிய சிந்து கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த ஆன் சே யங் 18-21, 21-5, 21-9 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். ஆன் சே யங்குடன் 6வது முறையாக மோதிய சிந்து முதல் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் மீண்டும் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

The post ஆசிய பேட்மின்டன் சிந்து ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: