இதனை செயல்படுத்தும் விதமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை 2338 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி 2025-26ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை 2338 கிராம ஊராட்சிகளில் ரூ.267.159 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் காய்கறி சாகுபடி, பழச்செடி தொகுப்புகள் வழங்குதல், தென்னங்கன்று விநியோகம், நிலநீர் ஆய்வு, கிணறு அமைத்தல், பம்பு செட்டுகள், பண்ணை குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
The post கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் 2,338 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த ஒப்புதல்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.
