மாதவரம்: கொடுங்கையூர் எழில்நகர் பகுதியில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் கொடுங்கையூர் எழில்நகர் தொப்பை விநாயகர் கோயில் அருகே கொடுங்கையூர் போலீசார் சந்தேகத்திற்கிடமன 2 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அவர்கள் புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார்(21), ரஞ்சித்குமார்(22) என்பதும், இவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு, முன்பின் தெரியாத நபர்கள் வந்தால் அவர்களை மிரட்டி பணம் பறித்துவந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.
