பள்ளி கல்வித்துறை நலத்திட்டங்களை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவியரர், ஆசிரியர்களுக்கு அதிக அளவில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கவும், அதுதொடர்பான முடிவுகளை உறுதி செய்யவும் 38 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக பள்ளிக் கல்வி இயக்குநரின் முன்மொழிவு ஆய்வு செய்யப்பட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மாவட்டம்- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெங்கடபிரியா, செங்கல்பட்டு- சமக்ரசிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, திருவள்ளூர்- பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, காஞ்சிபுரம்-ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமா நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post பள்ளி கல்வித்துறை நலத்திட்டங்களை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: