யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிக்க விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கலாம்

சென்னை: யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 2023-2024ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

12ம் வகுப்பு முடித்த மாணவர்கள், மேற்கண்ட பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, //www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் ஆணையரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த ஆயுஷ்முறை மருத்துவக் கல்லூரிகளிலோ நேரில் வழங்கப்படாது.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600106 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 14ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

The post யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிக்க விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: