ஆவடி: தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என ஆவடி டேங் பேக்டரி போலீசாருக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூரில் உள்ள சார்பு அமர்வு நீதிமன்றம், ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட கோவில்பதாகை மேட்டு தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம்(48). நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த சில வருடங்களாக தலைமறைவாக உள்ளார். இவர் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பல இடங்களில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, வருகின்ற ஜனவரி 11ம் தேதி அருணாச்சலம் என்பவர் சார்பு அமர்வு நீதிமன்றம் அம்பத்தூரில் ஆஜராகி தனது விளக்கத்தை அளிக்க வேண்டும். என இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
The post அம்பத்தூரில் உள்ள சார்பு அமர்வு நீதிமன்றத்தில் தலைமறைவு குற்றவாளி ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.