போலி கையெழுத்து விவகாரம் என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது: ஆம்ஆத்மி எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி சேவைகள் மசோதாவை நாடாளுமன்ற தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா மாநிலங்களவையில் நோட்டீஸ் கொடுத்திருந்தார். அதில்.பாஜ , அதிமுக எம்பிக்களின் போலி கையொப்பங்கள் இடப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இதுகுறித்து விசாரிக்க உரிமை குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.

இந்நிலையில், ராகவ் சத்தா நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது. எந்த ஒரு கட்சி உறுப்பினரின் அனுமதியை பெறாமலும் அவரது கையெழுத்து இல்லாமலும் அவர் பெயரை தேர்வு குழுவுக்கு பரிந்துரைக்க முடியும். என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாதது. போலி கையெழுத்து இட்டிருந்தால் அதை பாஜ கட்சியால் காண்பிக்க முடியுமா? என்னுடைய குரலை ஒடுக்க பாஜ முயற்சிக்கிறது’’ என்றார்.

The post போலி கையெழுத்து விவகாரம் என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது: ஆம்ஆத்மி எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: