விமானத்தில் வெள்ளை எரிபொருள் முழுவதுமாக இருப்பு இருந்த நிலையில் விழுந்த உடனேயே வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயனித்த இரண்டு விமானிகள், பத்து விமான பணியாளர்கள் உட்பட 242 பேரில் 241 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர்பிழைத்துள்ளார். விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மும்பையில் இருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 154 பேருடன் நேற்று நள்ளிரவு, சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் அவசரமாக மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது. அதன்பின்பு பயணிகள், வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு, இன்று காலை, பயணிகள் சென்னை வந்து சேர்ந்தனர்.
The post நடு வானில் இயந்திர கோளாறு; அவசரமாக மும்பையில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம்! appeared first on Dinakaran.
