கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் ஒன்றிய பாஜ அரசின் செயல்பாடுகளையும், தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பாஜவின் தமிழர் விரோதப் போக்கிற்காகவும்தான் எடப்பாடி பழனிசாமி கோபமடைய வேண்டும். முருகன் பெயரில் பாஜ நடத்திய அரசியல் கூட்டத்தில் பெரியாரையும், அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் காணொளியைப் பார்த்து அமைதியாக உட்கார்ந்திருந்த தன் கட்சி நிர்வாகிகள் மீது அவருக்கு கோபம் வரவில்லை. இன்னமும் அவரது கட்சி அண்ணாவின் பெயரில்தான் இயங்குகிறதா இல்லையா? சமீபத்தில், திமுகவின் ஐ.டி.விங், பாஜவின் துரோக முகத்தையும், நமது தமிழர்களின் பெருமைமிக்க பண்பாட்டுக் கருவூலமான கீழடி விவகாரத்திலும், மேலும் பலவற்றிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தமிழ் விரோத நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தி, தக்க பதிலடி கொடுத்தது.
திமுக ஐடி விங்கின் பாய்ச்சலையும், அதிமுக ஐ.டி.விங்கின் படுதோல்வியையும் எதிர்க்கட்சித் தலைவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகையால், அதிமுக ஐ.டி.விங்கின் அவதூறு பரப்பும் வேலையையும் அவரே கையில் எடுத்துக் கொண்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அதிமுக ஐ.டி. விங் சரியாக செயல்படாததால் அரசு மீது அவதூறு பரப்பும் வேலையை செய்யும் எடப்பாடி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிக்கை appeared first on Dinakaran.
