பொன்னமராவதி : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி கிராமத்தில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி கிராமத்தில் உள்ள சின்னணி பெரிய கண்மாயில் ஆண்டுதோறும் மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஜாதி, மதம் பாகுபாடின்றி ஊர் ஒற்றுமைக்காக அனைத்து மக்களும் பங்கேற்கும் இந்த மீன்பிடித்திருவிழா இம்முறை மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நேற்று நடைபெற்றது.
அதன்படி இந்த ஆண்டும் நேற்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பங்கேற்க சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் குவிந்தனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை கொடியை காட்டி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். ஒரே நேரத்தில் கிராம மக்கள் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களோடு கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர்.இதில் கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால், பாப்புலட் போன்ற நாட்டுவகை மீன்கள் கிடைத்தன. அவற்றை வீடுகளுக்கு மக்கள் மகிழ்ச்சியுடன் அள்ளிச் சென்றனர்.
The post விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய மீன்பிடி திருவிழா-மீன்களை அள்ளிச் சென்ற மக்கள் appeared first on Dinakaran.