விராலிமலை ஊராட்சி அலுவலகம் முன் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்

விராலிமலை, டிச.3: விராலிமலை ஊராட்சி அலுவலகம் முன், காலிக்குடங்களுடன் திரண்ட பெண்கள் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கத்தலூர் ஊராட்சியை சேர்ந்த ஆத்துபட்டியில் கடந்த 20 நாட்களாக மேல் நிலை நீர்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றும் மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் வழங்கப்பட வில்லை. இதையடுத்து நேற்று மதியம் ஆத்துப்பட்டி பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடிங்களுடன் ஊராட்சி அலுவலகம் முன் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விராலிமலை போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஒன்றிய நிர்வாகம் குடிநீர் வழங்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டம் கைவிடபட்டது. விராலிமலை ஊராட்சி அலுவலம் முன் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திரண்டு குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: