பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

சேந்தமங்கலம், டிச.1:எருமப்பட்டி வட்டார வள மையத்தின் சார்பில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயராஜ், வட்டார கல்வி அலுவலர் சந்திரவதனா ஆகியோர் கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், ஆசிரியர் பயிற்றுநர்கள் மணிமேகலை, கற்பகம், சாந்தி, சிறப்பு ஆசிரியர்கள் குமார், ராஜா, முடக்கு நீக்கியல் சிறப்பு மருத்துவர் தீபா, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் வட்டார பகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று பள்ளி செல்லா இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணி வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Related Stories: