கலெக்டர் தகவல் அரசு மினி கிளினிக்கில் மருந்தாளுனர் பணியிடம் உருவாக்கிட வேண்டும்

திருவாரூர், டிச.1: அரசு அறிவித்துள்ள மினி கிளினிக்கில் மருந்தாளுநர் பணியிடம் உருவாக்கிட வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு 2000 மினி கிளினிக்குகளை அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் வரவேற்கிறது. மக்களை நோக்கி மருத்துவம் என்பது மகத்தானது. இருப்பினும் இத்திட்டத்தில் மருத்துவர், செவிலியர் மற்றும் அடிப்படை பணியிடம் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

மினி கிளினிக்குகளில் வருகை தரும் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கும் பணிக்கு மருந்தியல் படித்த மருந்தாளுநர் பணி என்பது மிகவும் அவசியமானது. 1948 மருந்தியல் சட்டப்படி மருந்துகளை மருந்தாளுநர் மட்டுமே கையாள வேண்டும் என்ற அடிப்படையிலும் மக்கள் நலன் கருதியும் மினி கிளினிக்குகளில் மருந்தாளுநர் பணியிடம் உருவாக்கிட வேண்டும் என்பதை அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் வலியுறுத்தி வேண்டுகிறது. இவ்வாறு மாநில தலைவர் சுப்பிரமணியன் பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: