கல்லூரியில் சேர்ந்திருப்போம் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து சேராமல் போன மாணவர்கள் வேதனை

மன்னார்குடி, நவ. 23: மருத்துவ கலந்தாய்வுக்கு முன்னால் முதல்வர் அறிவித்து இருந்தால் நாங்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இருப்போம். தற்போது எங்கள் மருத்துவர் கனவு சிதைந்து விட்டதே என்ற வேதனையில் உள்ளோம். முதல்வர் எங்கள் நிலைையை உணர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த வசதி இல்லாத காரணத்தால் கள்ளூறியில் பெற முடியாமல் போன பெருகவாழ்ந் தான் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம். கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தானை சேர்ந்த மோகன் என்பவரது மகள் பாக்கியலெட்சுமி (17). ரவி என்பவரது மகன் வினோத் (17). இருவரும் பெருகவாழ்ந்தான் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து முடித்து விட்டு டாக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் நீட் தே ர்வு எழுதினர். அதில் பாக்கியலெட்சுமி 195 மதிப்பெண்களும், வினோத் 193 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றனர். இருப்பினம் இருவருக்கும் டாக் டர் சீட் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசு அறிவித்ததால் இருவரும் கலந்தாய்வில் பங்கேற்றனர். இவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வில்லை. தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. தனியார் கல்லூரியில் பணம் கட்டும் அளவிற்கு வசதி இல்லாத காரணத்தால் இருவரும் கல்லூரியில் சேராமல் மன வேதனையுடன் வீடு திரும்பினர். இந்நிலையில், 7.5.சதவீத அரசு ஒதுக்கீட்டின்படி தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த அனைவரின் கல்வி செலவை திமுக ஏற்றுக்கொள்ளும் என முக. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனால் மாணவர்களும் அவர்களின் பெற்றோ ர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து முதல்வர் பழனிச்சாமியும் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தவர்களின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என்று அறிவித்தார்.

இதனால் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு பயன் கிடைத் துள்ளது. ஆனால், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் வசதி இல்லாமல் கல்லூரியில் சேராமல் போன பல மாணவ- மாணவிகளின் மருத்துவ கனவு பறிபோய் விட்டது. இதுகுறித்து, தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தும் போதிய வசதி இல்லாத காரணத்தினால் மருத்துவம் படிக்கச் முடியாமல் போன பெருகவாழ்ந்தான் கிராமத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி, வினோத் ஆகியோர் கூறுகையில், எங்களுக்கு மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைத்தும் பொருளாதார ரீதியாக வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தால் கல்லூரியில் சேர இயலவில்லை.

இந்நிலையில், முதல்வரின் அறிவிப்பு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை முதல்வர் கலந்தாய்வுக்கு முன்னேரே அறிவித்து இருந்தால் நாங்களும் தனியார் கல்லூரியில் சேர்ந்து இருப்போம். எங்களின் மருத்துவர் கனவும் நிறை வேறி இருக்கும். தற்போது அறிவித்துள்ளது மனவேதனை அளிக்கிறது. எங்களை போல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முதல்வர் எங்களின்|மருத்துவ கனவை நிறைவேற்ற உடன் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கும் இந்த ஆண்டு கல்லூரியில் சேர வாய்ப்பு தருமாறு பல மாணவ. மாணவிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என கூறினர்.

Related Stories: