இளையான்குடி, நவ.23: திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதியில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளையான்குடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளையான்குடி கண்மாய்க்கரை பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு, முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் முருகானந்தம், மலைமேகு, பழனிவேல், மூர்த்தி, உள்ளிட்ட திமுக.வினர் கலந்து கொன்டனர்.