கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும் கொரோனா விழிப்புணர்வு பேரணி

தஞ்சை, நவ.13: தஞ்சையில் கொரோனா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். தஞ்சை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம் வழியாக தஞ்சையின் முக்கிய வீதிகளில் சென்றது. பேரணியில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்பினாலும் கொரோனா நோய்த் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கடைகளுக்கு செல்கின்றனர். பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கை கழுவுதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்களை வெளியே அழைத்து செல்ல கூடாது. அரசின் வழிகாட்டுதலை பின்பற்றினால் கொரோனா 2ம் அலை ஏற்படும் நிலையை தடுக்க முடியும். தஞ்சை மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் வணிகர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு தீபாவளி பண்டிகையின்போது கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்குதல், கை சுத்திகரிப்பான் வழங்குதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். பேரணில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சை ஆர்டிஓ வேலுமணி, மாநகராட்சி நகர்நல அலுவலர் நமச்சிவாயம், செயற்பொறியாளர் ராஜகுமாரன், தாசில்தார் வெங்கடேஸ்வரன், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், ரெட்கிராஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: